Police Recruitment

கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது

கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தக்கார் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை எதிர்த்து கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோவில் உள்ளே அனுமதி வழங்கப்படுவது இல்லை. எனவே சிவகங்கை சாந்தி வீரன் சாமி கோவில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கு தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது என வும், அட்டவணைப்படுத்தப் பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும.

இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக் கூடாது, அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.