பள்ளிக் கூடங்களா? அடிமை கூடாரங்களா?
மத்திய தகவல் ஆணையம் கொடுத்த சவுக்கடி
Ref. Central Information Commission: Bharmanand misra.vs kendiriya vidyalaya.Sangadan 2016.decided on 22.07.2016.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அந்த குழந்தைகளை பள்ளிகூடங்களில் பொதி சுமக்கும் அடிமைகளாக மனரீதியாக உடல் ரீதியாக பாதிப்படைய செய்கிறார்கள் வெளி நாடுகளில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்க்கு முன் முதல் நாளிலிருந்தே அவர்களின் நாக்கில் தேன் தடவி அனுப்புவார்கள்.அந்நாட்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வது ஒரு இனிப்பான அனுபவமாக.அடிமனதில் பதிந்து விடும். ஆனால் நம் நாட்டில் பெற்றோர் மாறி மாறி பரபரப்பாக வீட்டில் அதிகாலையிலிருந்தே குழந்தையை தயார் செய்து ஒரு போருக்கு செல்வது போல் அனுப்புவார்கள் பள்ளியிலோ ஆசிரியர்கள் குழந்தைகளை மன ரீதியாக மட்டுமில்லாமல் உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு விடி வெள்ளியாக சரித்திரம் படைக்கும் ஒரு தீர்பை மத்திய தகவல் ஆணையம் வழங்கியுள்ளது. கேந்திரிய வித்யாலயா (சங்காதன் ) பள்ளியின் ஒரு மாணவனை அந்த பள்ளியின் ஆசிரியர் கடுமையாக பாதிக்கும்படி அடித்துள்ளார் (Corporal punishment)இது சம்பந்தமான முழு விபரங்களையும் தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்டு குழந்தையின் தாய் மனு செய்திருந்தார். ஆனால் பள்ளி நிர்வாகம் இது ஒரு பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்டது. இது பற்றி விபரங்களை பள்ளிக்கு சம்பந்தமில்லாத ஒரு மூன்றாம் நபருக்கு தர வேண்டிய தேவையில்லை என வாதாடியது. ஆனால் மத்திய தகவல் ஆணையம் இந்த வாதத்தை ஏற்க்க மறுத்து கடும் கண்டணத்தை தெரிவித்தது. இந்தியாவில் பள்ளிகளில் குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது பற்றி கவலை தெரிவித்தது.இது IPC Right of children to free and compulsory education act 2009 மேலும் Juvenile justice (care and protection of childrens) act 2000 படி குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துவது தண்டிக்கப்பட வேண்டிய. குற்றமாகும் பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்திட வேண்டும் என அதிரடியாக தீர்ப்பளித்தது அதுமட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து கேந்திரியா வித்தியாலயா பள்ளிகள் CBSE பள்ளிகள் ICSC பள்ளிகளும் இது சம்பந்தமான ஒரு முறையான விதிகளை ஏற்படுத்தி உடல் ரீதியான தண்டனைகளை அறவே நீக்கிட வழி செய்திட வேண்டும் இது சம்பந்தமான National commission for protection of child வழி காட்டுதலை பின் பற்றிட வேண்டும் என உத்தரவிட்டது