Police Recruitment

24.06.2023
சென்னை பெருநகர காவல் துறை அடையாறு மாவட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெசண்ட் நகரில் நடைபெற்றது.

24.06.2023
சென்னை பெருநகர காவல் துறை அடையாறு மாவட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெசண்ட் நகரில் நடைபெற்றது.


இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சென்னை பெருநகர காவல் துறை அடையாறு மாவட்டம் சார்பில் திரு .மகேந்திரன் I.P.S (Deputy commissioner of police )தலைமையில் ,. திரு.நெல்சன்(உதவி ஆணையாளர் பொறுப்பில்,. (திரு.KN.சுதர்சன்(உதவி ஆணையாளர் நீலாங்கரை,.) (திரு.அமீர் அகமது உதவி ஆணையாளர் தரமணி) மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு.ராமசுந்தரம்( அடையாறு காவல் நிலையம்,.) திரு.மீனாட்சிசுந்தரம்(திருவான்மியூர்) ஆகியோரின் ஒத்துழைப்பால் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி அடையாறு மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பள்ளி மாணவர்களை கொண்டு போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரு .புஷ்பவனம் குப்புசாமி திருமதி .அனிதா குப்புசாமி மற்றும் ஈரோடு திரு.மகேஷ் போன்ற கலையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே காவல் துறை அதிகாரிகள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பேசியதாவது.

போதைப்பொருள் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு
பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பில் மாணவர்கள் முக்கியப் பங்காற்ற முடியும் . அவர்கள் முதலில் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் மருந்துகளின் ஆபத்தான விளைவைப் பற்றி அவர்கள் அறிந்தால், அவர்கள் போதைப்பொருளை ஒழிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவார்கள் , இதனால் அவர்கள் அதன் ஆபத்தான விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். பல்வேறு வகையான போதைப்பொருள் மற்றும் போதைப் பழக்கத்தின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பதையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் .

போதைப் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை வேதிப்பொருள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணர்வும், சந்தோஷமும் கிடைப்பதாக அதைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர். போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக் குழப்பம் போன்ற பிரச்சினை உண்டாகிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மது உடலின் உள்ளே செல்லச் செல்ல நம் உடலிலுள்ள வைட்டமின்களை அது அழித்து விடுகிறது. மேலும் கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது. தற்போது மது மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர். போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் பணப் பிரச்சினைகளும் உண்டாகிறது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகிழ்ச்சியுடன் சிறப்பாக நிறைவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.