இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 460 தொடர்பான சட்ட விளக்கங்கள்
இந்திய தண்டனை சட்டம் 1860 ன் பிரிவு 460 ல் சொல்லப்பட்ட சட்ட விளக்கங்களின்படி இரவில் வீட்டிற்குள் தடாலடியாக உட்புகுதல் அல்லது கதவை உடைத்து உள் நுழைதல் ஆகிய செயல்களால் சாவுக்கோ அல்லது மரண காயத்திற்கோ காரணமான நபர்கள் அனைவருமே தண்டனைக் குறியவர்கள்
இரவு நேரத்தில் பதுங்கியிருந்து வீட்டிற்குள் திடுதிப்பென்று நுழைதல் கதவை உடைத்து அத்து மீறி அடாவடியாக உட்புகுந்து தாக்குதல் ஆகிய செயல்கள் காரணமாக ஒருவர் மரணமடையவோ அல்லது சாவுக்கு நிகரான காயமடையவோ
நேரில் அச்செயலில் ஈடுபட்ட ஒருவர் மட்டுமல்லாலாது அவருடன் வந்த அனைவருமே தண்டனைக்குறியவர்கள் ஆவார்
ஒரு கூட்டத்தார் இரவில் வீட்டிற்குள் அதிரடியாக அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் போது அவருள் ஒருவர் சாவு அல்லது மரண அடி ஒருவருக்கு ஏற்படுத்தினால் அக்கூட்டத்தார் அனைவருமே தண்டிக்கப்படுவார்கள் என்று பிரிவு 460 இயம்புகிறது. நடந்த தவறுக்கு அவர்கள் அனைவருமே பொறுப்பாவார்கள் தவறுக்கு காரணமானவர்கள் என்பது கேள்வியல்ல.
பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து அல்லது பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஒவ்வொருவரும் பிரிவு 460 ல் சொல்லியபடி தண்டிக்காப்படுவர் அந்த வன்முறை தாக்குதலின் போது கொலை குற்றம் புரிந்த நபர் கூடுதலாக பிரிவு 302 ன்படி தண்டிக்கப்படுவர் அவருக்கு இரண்டு வித தண்டனை கிடைக்கும்
குற்றம் நடந்த நேரம் என்னும் சொற்றொடர் குறிப்பிடுவது பலவந்தமாக வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கவும் அதன் காரணமாக பூட்டை உடைத்து உள்ளே சென்று தாக்குதல் நடத்தவும் எடுத்து கொண்ட கால அளவை குறிக்கும் குற்றச் செயல் நடை பெற துவங்கிய காலத்துக்கு முந்தைய நேரத்தையோ அல்லது குற்றம் நடந்து முடிந்த காலத்திற்க்கு பிந்தைய நேரத்தையோ அது குறிப்பிடுவதில்லை
குற்றவாளி தப்பித்து ஓடுகையில் மரண காயம் ஏற்பட காரணமானார் எனில் பிரிவு 460 ன் கீழ் அவரை தண்டிக்க முடியாது. இரவில் வீட்டின் அருகில் பதுங்கியிருந்து தடாலடியாக வீட்டிற்குள் நுழைந்தாவர்கள் மேல்தான் பிரிவு 460 ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் அவர்களை சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது
பிரிவு 460 ன் கீழ் நிரூபனம் செய்யப்பட வேண்டியது.
இரவில் பதிங்கியிருந்து வீட்டிற்குள் நுழையவும் பூட்டை உடைத்து அடாவடியாக நுழையவும் இருவர் அல்லது அதற்க்கு மேற்பட்டோர் ஈடுபட்டிற்க வேண்டடும் அவர்கள் அனைவருமோ அல்லது ஒரு சிலரோ இத்தகைய குற்றம் புரிந்திருக்க வேண்டும் சாவு அல்லது மரணக் காயம் ஏற்படுத்துவதற்க்கு அவர்களில் ஒருவர் காரணமாக அல்லது அதற்கான முயற்சியை செய்திருக்க வேண்டும் இரவில் வன்முறையாக வீட்டிற்குள் நுழைந்து தாக்குதலையோ பூட்டை உடைத்து உட்புகுந்து தாக்குதலையோ மேற்சொன்ன குற்றத்தை செய்திருக்க வேண்டும் பிரிவு 460 கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கு பிடியாணை தேவையில்லை எனினும் முதலில் பிடிவாரண்ட்டு பிரப்பிக்கப்பட்டு விடும் இத்தகைய குற்றங்களுக்ககு ஜாமீன் கிடைக்கக்கூடும் இத்தகைய வழக்குகளில் சமரசம் செய்வதற்கான வாய்ப்பு கிடையாது இவ்வழக்குகள் பெரும்பாலும் செசன்ஸ் நீதி மன்றத்திலேயே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்