பாலக்கோட்டில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு பாலிடெக்னிக்கல்லுரி மற்றும் பாலக்கோடு காவல் நிலையம் இணைந்து கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி சிந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலமானது தாசில்தார் அலுவலகம் தொடங்கி, பஸ் நிலையம். ஸ்தூபி மைதானம், கடைத்தெரு, , தக்காளிமண்டி மற்றும் முக்கிய வீதி வழியாக காவல் நிலையம் சென்றடைந்தது.
போதையில் நீ வீதியில் குடும்பம், சொல்வதை கேளு போதையிலிருந்து மீளு, வேண்டாம் போதை, போதை பாதையை மாற்றும், ஆகிய கோஷங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி கோஷமிட்டு ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செண்பகராஜா, பேராசிரியர் ஆரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோகுல், முருகன், எழுத்தர் சின்னசாமி மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.