Police Recruitment

நம் இந்திய குடிமக்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு கரகோஷம் கொடுத்து பாராட்ட வேண்டிய ஒரு அற்புத தீர்ப்பு

நம் இந்திய குடிமக்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு கரகோஷம் கொடுத்து பாராட்ட வேண்டிய ஒரு அற்புத தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது அதர்மத்திற்கு எதிராக போராட நமக்கு கிடைத்திற்கும் ஒரே ஆயுதம் என்றால் அது மிகையாகாது.

நமது அரசு நமக்கு தேவையான தகவலை முறையான மனு கொடுத்து பெற்றிடலாம் என சட்டம் இயற்றி நமக்கு அளித்துள்ளது

அரசின் எந்த துறையாக இருந்தாலும் நாம் உரிய முறையில் மனு அளித்து தகவலை பெறலாம் ஜனநாயக நாட்டில் அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்

Democracy is – for the people – by the people – of the people.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் மக்களுடைய நிர்வாகத்தால் ஆளப்படுகிறது. இதில் வானளாவிய அதிகாரம் ஒரு அதிகாரி கொண்டுள்ளார் எனவே அவரின் நடவடிக்கைகளைப் பற்றி அவரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை பற்றி நாம் தகவல் அறிய முடியாது என கூறிட யாருக்கும் அதிகாரமில்லை.

அதிலும் ஒரு ஊழல் புரிந்த அதிகாரியின் ஊழல் வழக்கின் விபரங்களை அளித்திட முடியாது என்ற செய்தியை படிக்கும் போதே இரத்தம் கொதிக்கிறது அல்லவா?

இதிலும் நமக்கு ஆதரவு கரம் நீட்டுவது நம் மாண்பு மிகு ஜனநாயக காவலர் உச்ச நீதி மன்றம்தான்.

ஆம் இது நடந்தது ஹரியானா மாநிலத்தில் ஊழல் புரிந்த ஒரு அரசு துறையின் அதிகாரிகளின் மீது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது ஆம் நடந்து கொண்டே இருந்தது.

ஹரியானா மாநிலத்தில் எத்தனை அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டிற்காக விசாரணைக்கு உட்பட்டிருக்கிறார்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற அரசூழியர்களின் பட்டியல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தாலும் சம்பளம் சம்பள உயர்வு பெற்றுக்கொண்டு சந்தோசமாக பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் பட்டியல் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்று ஒரு நீண்ட பட்டியலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு சமூக ஆர்வலர் கேட்டு மனுவாக அளித்திருந்தார்

மாநில தகவல் ஆணையத்தின் கமிஷனர் Grish Ramachandra Desh pande vs CIC (2013)SCC 212 தீர்ப்பின் அடிப்படையில் அரசு வேலையில் இருக்கும் ஒரு அதிகாரிக்கும் அவருடைய மேல் அதிகாரிக்கும் இடையே உள்ள ஒரு விசாரணை ரகசியத்தை வெளி நபருக்கு வழங்கிட கூடாது என்று நிராகரித்தது

இது சம்பந்தமான மறு ஆய்வு மனுவை அந்த சமூக ஆர்வலர் திரு. சுபாஷ் என்பவர் தாக்கல் செய்தார்

உயர் நீதிமன்ற நீதியரசர் G.S. Sandhawalia மாநில தகவல் ஆணையத்தின் தீர்ப்பை ரத்து செய்து First Appellate Authority cum Addition Directorate General of Police vs CIC(LDA no 744 and 745 of 2011) உச்ச நீதி மன்ற அமர்வின் தீர்ப்பை மேற் கோள் காட்டி ஒரு நபர் அரசு ஊழியரின் ஊழல் சம்பந்தமான தகவல்கள் பெற உரிமை இருக்கிறது அவருக்கு முழுத் தகவல்களையும் அளித்திட வேண்டும் என்ற ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published.