தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
வளர்மதி தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவில் ஜெயபிரகாஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து வீட்டின் முன் பகுதியில் இருந்த பால்கனியில் அமர்ந்துள்ளார். காலையில் வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது ஜெயபிரகாஷ் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து தென்காசி போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி அரசு மருத்துவமனை டாக்டரின் கணவர் உடல் நலக் குறைவால் இறந்தாரா?, அல்லது அவரது சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.