Police Recruitment

அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா?-ஐகோர்ட்டு கேள்வி

அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா?-ஐகோர்ட்டு கேள்வி

அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதானவர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.