Police Recruitment

அதிவேக வாகனங்களால் அடிக்கடி நடக்கும் விபத்துகள்

அதிவேக வாகனங்களால் அடிக்கடி நடக்கும் விபத்துகள்

மதுரையில் இருந்து மற் றும் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய சந்திப்பு மையமாக திருமங்கலம் உள்ளது. இந்தியாவின் முதல் நான்கு வழிச்சாலையான காஷ்மீர் கன்னியாகுமரி நெடுஞ் சாலை திருமங்கலம் வழியாக செல்கிறது.

சென்னை வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள், மதுரையில் இருந்து செல்லும் வாகனங்கள் பெங்களூரு, கோவை, கொடைக்கானல் வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக தான் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், சிவகாசி, தென் காசி, செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இதனால் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக திருமங்கலம் உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலையில் கப்பலூர் தொழிற் பேட்டை உள்ளது. இதனால் பயணிகளின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தொடர்ச்சியாக திருமங்கலம் பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலையில் வாகனங் கள் அதிவேகத்தில் சென்றபடி இருக்கும்.

இந்த நிலையில் அஜாக்கிரதையாக கார்கள், இரு சக்கர வாகனங்களை இயக் குபவர்கள் விபத்தில் சிக்குவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களில் திருமங்கலம் நான்கு வழிச் சாலை பகுதியில் நடந்த விபத்துகளில் பலர் இறந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக நடந்த விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரை இழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் பகுதியில் விபத் துகளை தடுக்க அரசும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் வேகக் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. நாம் வாகனத்தில் செல்லும் போது வாகனத்தை ஸ்கேன் செய்து வேகத்தை கம்பங்களில் அமைக்கப் பட்டுள்ள டிஜிட் டில் போர்டுகள் காட்டுகின்றன.

திருமங்கலம் நான்கு வழிச்சாலை பகுதியில் இத்தகைய வேகக் கண்காணிப்பு கருவிகளை அதிகமாக பொருத்த வேண்டும் எனவும், மேலும் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை தரும் தொழில் நுட் பத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களின் செல் போன்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பவும், உடனடி அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.