Police Department News

காரைக்காலை கலங்கடித்த செல்போன் திருடர்கள்!- லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் சிக்கிய பின்னணிலட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்

காரைக்காலை கலங்கடித்த செல்போன் திருடர்கள்!- லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் சிக்கிய பின்னணிலட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்கால் நகரத்தில் செல்போன் திருட்டு தினமும் நிகழும் நிகழ்வாகிப்போனதால், திருடர்களைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்தது. இது தொடர்பாக மூவரைக் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து செல்போன்கள், ரொக்கம் கைப்பற்றி பொதுமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.காரைக்கால் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் திருட்டுகள் நிறைய நடந்து வந்தன. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இந்நிலையில் திருநள்ளாறு ரோட்டில் ‘காரைக்கால் எலெக்ட்ரானிக்’ எனும் மொபைல் கடையில் தஞ்சாவூர் பாப்பா கோயிலைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் ஒரு சில மொபைல்களைத் திருடிவிட்டதாகத் திருநள்ளாறு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது சமீர் என்பவர் நகரக் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக, காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் (தெற்கு) மேற்பார்வையில் ஆய்வாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முகமது ஷேக் அலாவுதீன், ராமசாமி மற்றும் காவலர்கள் மதிவாணன், சிவகுமார், மாரியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியில் ஐயப்பனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவரை விசாரித்தனர். விசாரணையில் 2019 மார்ச் மாதம் முதல் காரைக்காலில் பல மொபைல்களைத் திருடி, நண்பர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த மதன், திருவாருரைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பெரும் லாபத்தை ஈட்டி வந்ததாக ஐயப்பன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்இதனடிப்படையில் குற்றவாளி ஐயப்பன் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் ரூ 1,65,000/- மதிப்புள்ள செல்போன்களும், ரூ 30,000 மதிப்புள்ள சாம்சங் கடிகாரங்களும், ரூபாய் 5,06,000/- மும் கைப்பற்றப்பட்டன. ஐயப்பன் நண்பர்களான மதன் மற்றும் வரதராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 1,25,000/- மற்றும் ரூ 60,000 மதிப்புள்ள 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் குற்றவாளிகளைக் காரைக்கால் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.செல்போன் திருடர்களை சிறையில் அடைத்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.