மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி
11.08.23 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் பள்ளி கல்லூரி மற்றும் சாலையின் முக்கிய சந்திப்புகளில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர் இதில் தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிடம் திருமங்களேஸ்வரன், போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார் துணை ஆணையர் தெற்கு திரு பிரதீப், போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், காவல் உதவி ஆணையர்கள் செல்வின்,மாரியப்பன்,காமாட்சி, காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, மாடசாமி, மணிகண்டன் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி மேற்கொண்டனர். இதே போல் மதுரை மாநகரின் அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களிலும் சாலையின் முக்கிய சந்திப்புகளிலும் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது