நெல்லை கல்லிடைக்குறிச்சி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கீழஏர்மாள்புரம், தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி வயது 64 மற்றும் அவரது மகன் சட்டநாதன் வயது 32 ஆகிய இருவரும் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சிகாவல் ஆய்வாளர், திருமதி. ராஜகுமாரி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 16.09.2021 அன்று எதிரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.