காசி காவல்நிலைத்தில் காவல் ஆய்வாளர் கால பைரவர்
உத்தர்பிரதேஷ் காசியில் காவல்நிலைய பொறுப்பில் உள்ளவர்கள் முக்கிய நாற்காலியில் உட்காருவதில்லை. உட்கார்ந்தாலும். நாற்காலிக்கு பக்கத்தில் இரண்டாவது நாற்காலி போட்டு தான் உட்காருவார்கள். முதல் நாற்காலி கால பைரவருக்கு தான்..!
இது காசி கோத்வாலியின் காவல் நிலையம், அங்கு பொறுப்பாளராக காலபைரவர் கடவுளே அழைக்கப்படுகிறார். இந்த காவல் நிலையம் இன்று வரை எந்த அதிகாரியாலும் ஆய்வு செய்யப்பட்டது இல்லை. ஏனெனில் அந்த அதிகாரிகளே பணியில் சேருவதற்கு முன் இங்கே ஆசீர்வாதங்களை பெற வருகிறார்கள்.!
இதைப் பற்றிய நிறைய கதைகள் உள்ளது.
விஷ்வரகனேஜா பகுதியில் உள்ள கோத்வாலி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்திற்கு பின்னால் காலபைரவர் கோவில் உள்ளது.
தற்போதைய பொறுப்பில் உள்ள ராஜேஷ் சிங், ஃபுல்னியரிடம் பேசியதில் , இந்த பாரம்பரியம் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக இயங்குகிறது, இந்த கோத்வாலி காவல் நிலைய ஆய்வாளர் அலுவலகத்தில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். முக்கிய இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் காலபைரவர் மட்டுமே.
இந்த காவல் நிலைய ஆய்வாளர் அடுத்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்!