Police Recruitment

மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிரடி சோதனை
மதுரை நகர் பகுதிகளில் உள்ள கல்வி நிலைய வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகர் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி, கஞ்சா, புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்படி, போலீஸ் நிலையம் வாரியாக, தனிப்படை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது. அதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல், மதுரை தல்லாகுளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீசார் பீ.பீ.குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 100 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவில் வந்த செல்லூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் பேரில், இதில் தொடர்புடைய செல்லூரை சேர்ந்த கோபிநாத் (23), அபிஷேக் (23), நவீன் (21), மருந்துக்கடை உரிமையாளர் ராஜாமுகமது (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகள், 3 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 43 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.