பாலக்கோடு கேசர்குளிரோட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பு குறித்து டி.எஸ்.பி சிந்து தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர்குளிரோட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பது தொடர்பான கலந்தாய்வுகூட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய டி.எஸ்பி. சிந்து வருகின்ற 18ம் தேதி நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலையானது எக்காரணத்தை கொண்டும் சாலையை மறித்து வைக்க கூடாது,
ஏற்கனவே சிலைகள் வைக்க அனுமதிக்கபட்டவர்கள் மட்டுமே சிலைகள் வைக்கப்பட வேண்டும். புதிய இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை,
சிலை வைப்பதற்கு முன் கோட்டாட்சியர் அவர்களிடம் அரசால் வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்,
விநாயகர் சிலை வைக்கும் இடமானது பொது மக்களுக்கும், போக்குவரத்திற்க்கும் இடையுறாக இருக்க கூடாது,
சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது,
இராசாயணம் கலந்த சிலைகள் வைக்க கூடாது என்றும்
14ம் தேதி முதல் 20ம் தேதி வரை மட்டுமே சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,
20ம் தேதி 2 மணிக்குள் சிலைகளை கரைக்க எடுத்து சென்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிலை அமைப்பாளர்கள், பொதுமக்கள், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சுப்ரமணி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.