இருடியும் உலோகப் பொருள் இருப்பதாகவும் அதனை விற்பனை செய்ய உதவினால் லாபம் தருவதாக கூறி 1,43 ,கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 3 நபர்கள் கைது.
சென்னையைச் சேர்ந்த திரு .சின்னசாமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தனது உறவினரான கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரும் அவரது நண்பரான பிரபாகரன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த சுதாகரன் ஆகியோர்கள் கொடைக்கானல் மலையில் இருடியும் என்னும் அபூர்வமான உலோகத்தாலான பொருள் இருப்பதாகவும் அந்த பொருளை வாங்கிக்கொள்ள வெளிநாட்டு வியாபாரிகள் உள்ளனர் என்றும் தன்னை நம்ப வைப்பதற்காக (DRDL and DEDO ) அரசாங்க நிறுவனத்தினால் தர சான்றிதழ் வழங்கியது போலியான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தயார் செய்து காண்பித்து இந்த பொருளை விற்பனை செய்ய முதலீடு செய்தால் 250 கோடி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்ததாகவும், அதனை நம்பி வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பல தவணைகளில் ரூ.1,43,00,000/-த்தை கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு சொன்னபடி லாபத் தொகை கொடுக்காமலும் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் போலி ஆவணங்கள் மூலம் தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை மோசடி ஆவண குற்றப்பிரிவு-ல் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்து வந்த எதிரிகளை கைது செய்ய வேண்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தி ராய் ரத்தோர் இ.கா.பா, அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், துணை ஆணையாளர் திருமதி,N.S நிஷா இ.கா.பா, அவர்கள் மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையாளர் திரு.அகஸ்டியன் பால் சுதாகர் அவர்கள் அறிவுரையின் பேரில் மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி ஆவண குற்றப்பிரிவு. EDF-1 உதவி ஆணையாளர் திரு.S. ஜான்விக்டர் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த 1) கமலக்கண்ணன் ஆ/வ 51,த/பெ.ராமசாமி, எண் 9/A சபாபதி இல்லம், வேலுமணி நகர் 3வது தெரு ,கோபிசெட்டிபாளையம் 2) பிரபாகரன் ஆ/வ 42 , த/பெ தங்கபாண்டி, எண்.146 விஐபி முத்து நகர், நாகர் பாளையம் ரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகியோர்களை 05.09.2023 ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்திலும். 3) சுதாகர்.D.ஆ/வ 46 த/பெ. தேசிங்கு ராஜன் எண் 109 காசா கிராண்ட், புதிய பெருங்களத்தூர் சென்னை 120 என்பவரை சென்னையில் வைத்து 06.09.2023 ஆம் ஆம் தேதி கைது செய்து கனம் மத்திய குற்றப்பிரிவு பிரிவு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எழும்பூர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
விசாரணை அதிகாரி திரு.ஆப்ரகாம் குரூஸ் துரைராஜ் காவல் ஆய்வாளர்,EDF, Team- 1, அலைபேசி 9500134915.