ஜோதிஅள்ளியில் கனவனின் குடிப்பழக்கத்தல் குழந்தைகளுடன் சாப்பாடு இன்றி தவித்த மனைவி குழந்தைகளுடன் மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குப்பன்புரம் கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவரின் மகள் சூர்யா (வயது. 25) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பிரதிக்க்ஷா (வயது. 5), யக்க்ஷி (வயது. 3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனந்தராஜ் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி கடந்த சில மாதங்களாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவு கூட வழங்காமல் இருந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சூர்யா கடந்த 4ம் தேதி தன் தாய்க்கு,
வீட்டை விட்டு செல்வதாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 2 குழந்தைகளுடன் மாயமானார்.
சூர்யாவின் தாய் மகளை பல்வேறு இடங்களிலிலும் தேடியும் கிடைக்காததால்,
மகளை கண்டுபிடித்து தர கோரி சூர்யாவின் தாய் சித்ரா பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
இதுகுறித்து இன்று பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.