வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் – முதன்மை மாவட்ட நீதிபதி பேச்சு
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. இதனால் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சினைகள் நீதிமன்றத்தை நாடி வருகிறது. குடும்பப் பிரச்சினைகள் நீதிமன்றத்தில் அதிக அளவு வழக்குகளாக வருகிறது. வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இது இருந்தால் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.