Police Recruitment

சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு

சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு

சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள சமரச துணை மையங்களின் தொடக்க விழா நேற்று ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமை தாங்கினார். சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, இந்த கட்டிடத்தை திறந்து வைத்தும், துணை மையங்களை தொடங்கி வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “பொதுவாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்ட ரீதியாக வழிமுறைகள் இருந்தாலும் அவற்றை விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீதிமன்றங்களில் வழக்காடிகள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் சமரச தீர்வு மையங்களில் அது சாத்தியம். சமரச தீர்வு என்பது சிறந்த நடைமுறை. இ்ங்கு குடும்ப பிரச்சினைகள் மட்டுமின்றி வணிக ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.