Police Department News

வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்ப்யூட்டர்கள்- ஆவணங்கள் சாம்பல்: 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்ப்யூட்டர்கள்- ஆவணங்கள் சாம்பல்: 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

மதுரை ரெயில் நிலையம் எதிரே மேலவெளி வீதியில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. பிரதான வங்கியான இங்கு வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த கட்டிடத்தில் உள்ள தளங்களில் வங்கியின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் 5-க்கும் மேற்பட்ட காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதனை தொடர்ந்து வங்கியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்த போது வங்கியின் 2-வது தளத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திற்கும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திடீர் நகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தீயை கட்டுப்படுத்த முடியாததால் தல்லாகுளம், தீயணைப்பு வீரர்களும் வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த 2-வது தளத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும் ஏ.சி., மரச்சாமான்கள் எரிந்து நாசமாகின.

Leave a Reply

Your email address will not be published.