Police Department News

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழுஊரடங்கு பிறப்பித்து தொடர்ந்து அமலில் உள்ளது இதனை தொடர்ந்து பேரூந்து நிலையத்தில் பொரிகடலை தள்ளுவண்டியில் வைத்து வியாபரம் செய்யும் தள்ளுவண்டி வியாபாரிகள் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் மேலும் உணவிற்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக பேருந்து நிலையத்தில், பிழப்பு நடத்திவரும் தள்ளுவண்டி வியாபாரிகள் போக்குவரத்து இல்லாததால் தங்களது வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சிவா அவர்கள், மற்றும் சித்த மருத்துவர் மகேந்திரன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று அவர்களுக்கு உதவும் பொருட்டு நேசம் பவுண்டேசன் சார்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சிவா மற்றும் சித்த மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் இலவசமாக 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் இந்த வாய்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ் புலிகள் கட்சிக்கும் காவல்துறைக்கும், நேசம் பவுண்டேசனுக்கும் வியாபாரிகள் மனதார நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.