Police Department News

யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது?

யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது?

பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரத்தைச் சமர்ப்பித்து, பணம் செலுத்தும் ஸ்கிரீன் ஷாட் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்

புதுடெல்லி: யூபிஐ வசதிகள் நமக்கு மிகவும் வசதியான ஆன்லைன் பணபரிமாற்ற முறையாக உள்ளது. நாம் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பவருக்கும் சொடுக்கு போடும் நேரத்தில் பணத்தை அனுப்பிவைக்க முடியும்.  டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யும் வசதி, நமது நேரத்தை மிச்சப்படுத்திவிட்டது. மூலம் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை செலுத்தியோ அல்லது பணத்தை எடுத்தோ நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் சில சமயங்களில், பணத்தை அனுப்பும்போது, தவறான நபருக்கு அனுப்பிவிடுகிறோம்.

பணத்தை அனுப்ப யூபிஐ டிரான்ஸாக்ஷன் செய்யும்போது, இணையச் சேவையில் பாதிப்பு, பரிவர்த்தனை தோல்வி, தவறான எண்ணை உள்ளிடுவது, தவறான நபரின் பெயருக்கு பணம் அனுப்புவது என பல நேரங்களில் தவறாக பணம் அனுப்பிவிடுகிறோம். அதேபோல, நம்முடைய மொபைலில் பதிவு செய்துள்ள ஒரு எண் அல்லது ஒரே பெயருள்ள நபர்களில் ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக தேவையில்லாமல் மற்றொருவருக்கு பணம் அனுப்பிவிட்டது போன்ற எதிர்பாராத தவறுகள் நடக்கிறது.

கூகுள் பே, போன் பே, பாரத் பே, இப்போ பே, அமேசான் பே, ஹெச்எப்சி பே, பேடிஎம் என புழக்கத்தில் இருக்கும் பல பேமெண்ட் ஆப்களில், மொபைல் நம்பரை மட்டும் டைப் செய்து யூபிஐ மூலம் பணம் அனுப்புகிறோம்.

நாம் அனுப்பிய பணப் பரிமாற்றம் தவறு என்று தெரிந்தால், அதை எப்படி திரும்பப்பெறுவது? முக்கியமான இந்த விஷயத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். பணத்தை திரும்பப்பெற, இந்த விஷயத்தை உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வங்கியில் எழுத்துப்பூர்வ புகாரை பதிவு செய்யலாம்.

பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரத்தைச் சமர்ப்பித்து, பணம் செலுத்தும் ஸ்கிரீன் ஷாட் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்திற்கும் முன்பாக, பணத்தை தவறுதலாக அனுப்பிய நபரிடம் பேசி பணத்தை திரும்ப பெற முயற்சிக்கலாம். அந்த வழி ஒத்து வரவில்லை என்றால் வங்கியில் புகார் அளித்து அவரது வங்கிகள் கணக்கை உடனே முடக்கி பணத்தை எடுக்கலாம். ஆனால் இதனை உடனே செய்ய வேண்டும். வங்கி கணக்கில் இருந்து அந்த நபர் உடனே பணத்தை எடுத்துவிட்டால் பணத்தை வாங்குவது கடினம்.

உஙக்ளுடைய யுபிஐ சேவை வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிப்பது அவசியம். அதிகப்பட்சம் 24 – 48 மணிநேரத்திற்குள் பரிவர்த்தனை நீக்கப்பட்டு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். 

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வழக்கமாக 5 முதல் 14 நாட்கள் ஆகும். யுபிஐ சேவை வழங்குனரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும், பணம் திரும்ப வரவில்லை என்றாலும், உங்கல் புகாரை இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (National Payments Corporation of India) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம்.

நீங்கள் இங்கு புகார் அளிக்கும் போது பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை கண்டிப்பாக ஆன்லைனில் இணைக்க வேண்டும். பரிவர்த்தனை வகை, வங்கி பெயர், யுபிஐ ஐடி, மெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். அதன்பின்னர் என்.பி.சி.ஐ. சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டு புகாரை நிவர்த்தி செய்வார்கள். இது ஒருபுறம் எனில் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியைத் தொடர்பு கொண்டும் புகார் தரலாம்.

நீங்கள் டிரான்ஸாக்ஷன் செய்யும்போது உங்கள் கணக்கிலிருந்து, பெறுபவரின் கணக்கிற்கு பணம் செல்லவில்லையெனில் அந்த பணம் 48 மணி நேரத்திற்குள் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published.