சாலையில் திரியும் கால் நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
மதுரை அரசரடி சந்திப்பில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் ஏ.ஏ.சாலையில் கால்நடைகள் குறுக்கே திரிவதால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வதற்கு மையப்புள்ளியாக இருப்பது அரசரடி சந்திப்பு.
இச்சாலையில் மின் வாரிய அலுவலகம், திரையரங்கம், தனியார் மருத்துவ மனை, தனியார் வங்கிகள், சர்ச், மெடிக்கல் ஷாப், ஹோட்டல், பெடரோல் பங்க், வணிக வளாகங்கள், ஐ.டி.ஐ, பிரிட்டோ பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இருப்பதால் மற்ற சாலைகளை விட இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் காண்பபடுகிறது.
ஆரப்பாளையத்தில் இருந்து பெரியார், திருமங்கலம், விரகனூர் சுற்றுச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் இந்த சாலை எப்போதும் வாகனங் களால் பரபரப்பாக காணப் படும்.
இந்த நிலையில் ஞான ஒளிவுபுரம் சாலைகளில் கேட்பாரற்று திரியும் கால் நடைகளால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல் பவர்கள், இருசக்கர வாக னங்களில் போவோர் அவதி யடைந்து வருகின்றனர். சாலையின் குறுக்கே கால் நடைகள் நடப்பதால் சாலை யின் இடது புறம் செலவதா அல்லது வலது புறம் கால் நடைகளை முந்தி செல்வதா? என செய்வதறியாது வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
இதே போன்று மதுரை நகரில் 4 மாசி வீதிகள், காமராஜர் சாலை, வெளிவீதிகள், ரெயில்நிலையம், தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, அரசரடி, வெள்ளைபிள்ளை யார் கோவில் தெரு, மகபூப் பாளையம், ஆனையூர், கூடல்நகர், கூடல்புதூர், பி.பி. குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாடுகள் ரோட்டில் விடப்படுகிறது. அவைகள் சாலையில் அமர்வதால் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சில சமயம் மாடுகளால் பொது மக்கள் பல இன்னல் களை சந்திக் கின்றனர். மேலும் சாணம் உள்ளிட்ட கழிவுகளால் சுகா தார சீர்கேடும் ஏற்டுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை யில் பள்ளி சென்ற குழந்தை மீது கால் நடைகள் தாக்கியதில் காய மடைந்த மாணவி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்தது. அதே போன்று சம்பவம் நடக்கும் முன்னரே மாநக ராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டால் பெரும் விபத்தினை தவிர்க்கலாம். எனவே இனியும் மாநக ராட்சி அதிகாரிகள் மெத்த னம் காட்டாமல் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கவும் அவற்றின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.