குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
.
குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும்,பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் கோ.புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லூர்து நகர் பகுதியில் 120 கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் IPS., மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. தளபதி MLA அவர்கள் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr.A.பிரதீப் IPS., அவர்கள் உடன் இருந்தார்.மதுரை மாநகர காவல் துறை மற்றும் லூர்து நகர் மக்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் கோ.புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா, சார்பு ஆய்வாளர்கள்,காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.