
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
09.02.2026 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




