Police Recruitment

மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது

மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது

 மதுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நகரின் அடையாளத்தையே மாற்றியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை ஒரே நாளில் அப்புறப்படுத்தும் வகையில், 4 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக தேங்கியுள்ள குப்பைகள் மழை நீரில் நனைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனை அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் உபகரணங்கள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. குறிப்பாக மதுரை மாநகரில் தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் தீபாவளி தினத்தன்று அப்பகுதிகளில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியினை கடந்த நான்காண்டுகளாக மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறு தீபாவளி முன்னிட்டு தெற்குமாசி வீதி கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் நடைபெற்ற வியாபாரத்தின் போது சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியினை இன்று மாவட்டத் தலைவர் பாசவேல் சிந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் குப்பைகளை அகற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, பொருளாளர் வேல் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பணியில் ஏராளமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அந்த குப்பைகள் அவனி யாபுரம் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.