Police Recruitment

திக் திக் “திரில்லர்”.. 52 ஆண்டு கழித்து அம்பலமான அமெரிக்க கொலையாளி! சிக்கவைத்த சிகரெட் – எப்படி?

திக் திக் “திரில்லர்”.. 52 ஆண்டு கழித்து அம்பலமான அமெரிக்க கொலையாளி! சிக்கவைத்த சிகரெட் – எப்படி?

52 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஆசிரியையை கொலை செய்தவரை சிகரெட் துண்டு மூலம் புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் 52 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், சிகரெட் துண்டு மூலம் புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி இருக்கிறார்கள். அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? கொலையாளி யார்? விரிவாக காண்போம்.

அமெரிக்காவின் பர்லிங்டன் பகுதியை சேர்ந்தவர் ரீட்டா கரன். 52 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரீட்டா கடந்த 1971 ஆம் ஆண்டு தன்னுடைய குடியிருப்பில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

அப்போது அவருக்கு 24 வயதுதான். கொலை நடந்தபோது அவரது வீட்டில் யாருமே இல்லை. வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரீட்டா கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் இருந்த பல்வேறு பொருட்களை போலீசார் சேகரித்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இருப்பினும் கொலையாளியை நெருங்குவதற்கான ஒரு துளி ஆதாரம் கூட அவர்களிடம் சிக்கவில்லை. 5 ஆண்டுகளானது. 10 ஆண்டுகளானது. 20 ஆண்டுகளானது. 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஓடின.

எந்த முடிவும் கிடைக்காமல் காவல்துறையினர் தங்கள் தலையை பிய்த்துக்கொண்டார்கள். 50 ஆண்டுகள் ஆனதால் இந்த கொலை மீதான கவனமும் குறைந்தது. கொலையாளிக்கும் வயதாகி இருக்கும். அந்த வழக்கை முதலில் விசாரித்த அதிகாரிகளும் ஓய்வு பெற்று இருப்பார்கள். இந்த நிலையில்தான் கடந்த 2019 ஆம் ஆண்டு துப்பறியும் நிபுணர்கள் இந்த வழக்கை விசாரிக்க திட்டமிட்டார்கள்.

அப்போது போலீசாரால் சேகரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களை மீண்டும் தூசி தட்டி எடுத்து அவர்கள் பரிசோதித்தனர். அதில் இருந்த பொருட்களில் சிகரெட் துண்டும் ஒன்று. அந்த சிகரெட் துண்டு யாருடையது என்ற விசாரணையில் துப்புறிவாளர்கள் இறங்கினர். தற்போது டிஎன்ஏ தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ந்துவிட்ட நிலையில் சிகரெட் துண்டும் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் கிடைத்த முடிவுகளை வைத்து பல்வேறு குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது ஒருவரின் டிஎன்ஏவுன் பொருந்தியது. அவர் பெயர் வில்லியம்ஸ். இது தொடர்பாக வில்லியமின் மனைவி மிட்செலேவிடம் விசாரணை செய்து இந்த உண்மையை உறுதிபடுத்தியதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.

கொலை செய்தபோது வில்லியமுக்கு 31 வயதுதான். 2 வாரத்துக்கு முன் திருமணம் செய்திருந்திருந்த வில்லியம், சம்பவத்தன்று நடைபயிற்சிக்காக செல்வதாக மனைவியிடம் கூறி வெளியில் இருக்கிறார். அதே குடியிருப்பில் தனியாக வசித்த ரீட்டாவின் வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்துள்ளார் வில்லியம். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரம் 70 நிமிடங்கள்.

மீண்டும் வீட்டுக்கு வந்த வில்லியம் தனது மனைவியிடம் தான் வெளியில் சென்றதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார். கொலைக்கு பிறகு தாய்லாந்து சென்ற வில்லியம் மத துறவியாகி இருக்கிறார். பின்னர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து 2 வது திருமணம் செய்துள்ளார்.

போதை பொருளுக்கு அடிமையான அவர், 1986 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் இறந்து கிடந்து உள்ளார். எனவே குற்றவாளியை கண்டுபிடித்தும் அவருக்கு தண்டனை கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், கொலை செய்த 15 ஆண்டுகளிலேயே தன்னுடைய 46 வது வயதில் மரணத்தை தேடிக்கொண்டார் வில்லியம்.

ரீட்டாவை கொன்றது யார், ஏன் கொல்லப்பட்டார் என்ற எந்த விபரமும் தெரியாமலேயே அவரது தாயும் தந்தையும் இறந்து இருக்கிறார்கள். இந்த கொலையில் துப்பு துலங்கியதை தொடர்ந்து போலீசார் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட ரீட்டாவின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உண்மையை தெரிந்துகொண்டார்கள்.

ரீட்டாவை கொன்றது யார், ஏன் கொல்லப்பட்டார் என்ற எந்த விபரமும் தெரியாமலேயே அவரது தாயும் தந்தையும் இறந்து இருக்கிறார்கள். இந்த கொலையில் துப்பு துலங்கியதை தொடர்ந்து போலீசார் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட ரீட்டாவின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உண்மையை தெரிந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.