Police Department News

தமிழக ஐ.பி.எஸ்.,அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்ப்படும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr.ஆபாஷ்குமார் ,I.P.S.,அவர்கள்அறிவித்துள்ளார்

தமிழக ஐ.பி.எஸ்.,அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்ப்படும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr.ஆபாஷ்குமார்,I.P.S., அவர்கள் அறிவித்துள்ளார்

மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் “மிக்ஜாம்” புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மிக்ஜம்’ புயல் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு முழு முயற்சியை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். அதன்படி இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்க அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவ முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக சங்கம் முடிவு செய்துள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.