பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதி மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு
கடந்த மார்ச் மாத கணக்குபடி பெங்களூரு நகரில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றில் சுமார் 70 லட்சம் இருசக்கர வாகனங்கள் தான் பதிவு செய்யப்பட்டவை. மற்றவை பதிவு செய்யாமல் ஓடுகின்றன.
இந்த வாகனங்களால் பெங்களூரு நகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்து நெரிசலை குறைக்க அரசு எவ்வளவு நடவடிக்கையெடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நகரில் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் யாரும் செவி சாயிக்காமல் தொடர்ந்து போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
நகரிலுள்ள பெரும்பாலான சர்க்கிள் மற்றும் சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு போக்குவரத்து விதி முறை மீறல்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள் அதில் பதிவாகும் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர் அது மட்டுமின்றி போக்கு வரத்து போலீசாரும் தங்களின் செல் போனில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு குறும் தகவல் மற்றும் வீடுகளூக்கு அபராத ரசீது அனுப்பியும் பலர் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர் இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறீயவர்களிடமிருந்து அபராதம் வசூக்க
போலீசார் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையளித்தது அதில் பலர் அபராதங்களை செலுத்தினர். ஆனாலும் இன்னும் பலபேர் அபராதம் செலுத்தாமல் உள்ளனர் இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.இதன் மூலம் 173.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராத தொகை ரசீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது போல் பெங்களூரு நகரில் கடந்த 9 மாதங்களில் விபத்துக்களும் அதிகரித்துள்ளன. அதாவது கடந்த 9 மாதங்களில் மட்டும்
பெங்களூரு நகரில் 3706 விபத்துக்கள் பதிவாகியுள்ளன இதில் 651 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 3155 பேர் காயமடைந்துள்ளனர்
விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து விதிகளை மீறுவதுதான். என்றும் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாதென்றும் எவ்வளவு விழிப்புணர்வு நடத்தினாலும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.