Police Department News

தீயணைப்புத் துறை டூ ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஃபீனிக்ஸ் மங்கையின் வெற்றிக்கதை!

தீயணைப்புத் துறை டூ ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஃபீனிக்ஸ் மங்கையின் வெற்றிக்கதை!

தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தீயணைப்புத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

காவல்துறையில் பெண்கள் பலர் சாதித்த போதும் 2003ஆம் ஆண்டு வரை தீயணைப்புத் துறையில் பெண்கள் யாரும் சேரவில்லை. இந்த சூழலில் தான், தமிழ்நாடு அரசின் குரூப்-1 தேர்வில் வென்றதன் மூலம், தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியாக, நாகப்பட்டினத்தில் பணியில் சேர்ந்தார் பிரியா. அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தது.
உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் முக்கிய துறையான தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் அதுவரை பெண் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தால், பயிற்சியில் தொடங்கி அனைத்து பணி அனுபவங்களும் தனித்துவமாகவே இருந்ததாக பல சமயங்களில் பிரியா குறிப்பிட்டுள்ளார்.

படுகாயமடைந்த பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பிரியாவின் துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, 2012ஆம் ஆண்டு அவருக்கு தமிழ்நாடு அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் வீர தீர செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் பிரியாவை தேடி வந்தது. குடியரசுத் தலைவரிடம் வீர தீரச் செயலுக்கான பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த போது மீட்புப் பணியில் இவரது மேற்பார்வை மற்றும் பணியினை அரசும், அதிகாரிகளும் பாராட்டினர். மணப்பாறை அருகே சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சம்பவத்தின் போது, மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார் பிரியா ரவிச்சந்திரன். இப்படி சவாலான தீயணைப்புத்துறை பணியில், தனது உயிரை பணையம் வைத்து பிரியா மேற்கொண்ட பணிகள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டுதோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்புத்துறை இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டு தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை என்பதும் பிரியாவிற்கு கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

சேலத்தை சேர்ந்த பிரியா, பள்ளிப் படிப்பை சேலத்திலும், கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியிலும் முடித்தார். தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை மேற்கொண்ட பிரியா, இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற தீயணைப்பு பயிற்சி பள்ளியிலும் பயின்றுள்ளார். இவரது கணவர் ரவிச்சந்திரன், வருமான வரித்துறையில் தலைமை ஆணையராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.