Police Department News

தீவிரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி

தீவிரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் ‘மினி’ நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.

இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து பயிற்சி பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.