Police Department News

ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி‌.

ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி‌.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீ அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் குருக்கு பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய காவல் ஆய்வாளர் மாணவர்கள் பேருந்து படியில் நிற்க கூடாது என்றும் படியில் நின்று போனில் பேசக்கூடாது என்றும் பேருந்து ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து போனில் பேச வேண்டாம் என்றும் மாணவர்கள் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்வதால் விபத்து நேரிடும் அதில் கை கால்கள் இழக்கக்கூடும் சில சமயங்களில் உயிரைக் கூட விடக்கூடும் எனவே மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதையும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் தெரியாத நபர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் வாங்க கூடாது என்றும் எந்த உணவு பொருட்களையும் குளிர்பானங்களையும் வாங்க கூடாது அதில் போதை பொருட்கள் கலந்து இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறினார்.

அதற்குப் பிறகு தற்போது உள்ள காலகட்டங்களில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவைகளை பயன்படுத்துவதால் சில கெட்ட நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதால் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இணையதளங்கள் அனைத்தும் நம்மை மேம்படுத்துவதற்காக மட்டுமே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் கெட்ட விஷயங்களை விட்டு விட வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் நாம் முன்னேற முடியும் என்று கூறினார்.

இது போன்று பல்வேறு விஷயங்களை அவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதுபோக மாணவர்களுக்கு அவசர கால தேவையான தங்கள் பாதிப்புக்குள்ளான நேரங்களில் மேலே கண்ட சைல்ட் லைன் நம்பர் 1098 என்ற நம்பரை அழைத்து தங்களுக்கு ஏற்படும் குறைகளை வீட்டிலோ வெளியிலோ எந்த ஒரு சூழலிலும் நடக்கும் தவறுகளை எடுத்துக் கூற சொல்லியும் அறிவுறுத்தினார்.

மேலும் மாணவர்களுக்கு மன அழுத்தம் வரக்கூடாது என்றும் தேர்வு எழுதி அந்த தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதனால் சூசைட் அட்டெம்ன்ட் வரக்கூடாது என்றும் உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறைக்கான கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதில் கலந்துகொண்ட அந்த பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா அவர்கள் கூறிய அறிவுரைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.