ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியிடம் சைபர் மோசடி,
சென்னை முகப்பேர் மேற்கு நொளம்பூர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராணி மகேந்திரன் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியான இவரது மொபைல் போனுக்கு அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதில் நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து ரிவார்டு வந்துள்ளது. இந்த லிங்கை கிளீக் செய்து அது கேட்கும் தகவல்களை பதிவிட்டால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய ராணி குறிப்பிட்ட லிங்கை திறந்து தகவல்கள் மற்றும் ரகசிய எண்ணையும் பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 5000/- ரூபாய் எடுக்கப்பட்டதாக குறும்தகவல் வந்தது. இது குறித்து ராணி அளித்த புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.