அயோத்தியில் நகரத்தார் விடுதியில் தமிழக செட்டிநாடு சாப்பாடு
காரைக்குடியை தலைமையிடமாக கொண்ட நகரத்தார்கள் பல் வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் வழக்கமுடையவர்கள் அப்படி போகும் போது அங்கு தங்குவதற்க்கும் உணவிற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே விடுதி ஒன்றை கட்டி நன்கு பராமரித்து வருகின்றனர். காசியில் உள்ள நகரத்தார் விடுதி மிகவும் பிரபலம் அதே போல் கயா அலகாபாத் மற்றும் அயோத்தியிலும் நகரத்தார் விடுதி உள்ளது
அயோத்தியில் உள்ள நகரத்தார் விடுதி 1890 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது
அந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் செயல்பட்டு வருகிறது 3 வேளையும் பொங்கல் இட்லி சாப்பாடு என்று தமிழக செட்டிநாடு சாப்பாடு சைவ சாப்பாடு இங்கு கிடைக்கிறது ஒரே நேரத்தில் 120 பேர் விடுதியில் தங்கலாம் இங்கு தங்குவதற்கும் உணவிற்கும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இங்கு வருவோர்கள் தங்களின் வருகையின் விபரத்தை முன் கூட்டியே தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.
Ayothya nattukot Nagara chatram,
Nattukot SriRam Mandir, Baboo Bazar
Ayothya 224 123
UP India
cell 7311166233,
7373070733