ரயில் மீது கல் விழுந்து பயணி காயம் ரயில்வே போலீசார் விசாரணை
திருவனந்தபுரம் திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்பாத்துறை இடையே உள்ள குகை அருகே வந்த போது கல் உருண்டு விழுந்ததில் பயணி ஒருவர் காயமடைந்தார்.
திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 11.35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. மாலை 6.15 க்கு கொடைரோடு அம்பாத்துறை இடையில் குகையை கடக்கையில் கல் ஒன்று ரயில் மீது உருண்டு விழுந்தது இதில் கரூரை சேர்ந்த. பயணி வினோத் வயது 34, முகத்தில் காயம் ஏற்பட்டது
இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்
குகை பகுதியில் மறைந்து நின்று ரயில் மீது மர்ம நபர்கள் கல்லால் தாக்குதல் நடத்தினார்களா அல்லது தானாக விழுந்த கல்லா என ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.