மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கட்டிட தொழிலாளி காணவில்லை போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் B 6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் பாண்டிசெல்வி வயது 35 இவர் வீட்டு வேலை செய்து வருகிறார் இவரது கணவர் சுப்பிரமணி வயது 42, இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு கீர்த்திகா சஞ்சனா லக்ஷிதா என்ற மூன்று பெண்பிள்ளைகள் உள்ளனர்.
இவருக்கு குடி பழக்கம் உள்ளது இது காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பின் சரியாகி விடுவது வழக்கும்
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27 ம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் தன் மகள் சஞ்சனாவிடம் 1000 ரூபாய் கொடுத்து விட்டு வேலை செய்த இடத்தில் சம்பளம் வாங்கி வருவதாக கூறி வெளி சென்றவர் இது வரை
வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் கிடைக்காததால் பாண்டிசெல்வி அவர்கள் ஜெய்ஹிந்த்புரம் B 6 காவல் நிலைத்தில் காணாமல் போன தன் கணவர் சுப்பிரமணியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் காவல் நிலைய குற்ற எண். 92 ன்படி Man missing வழக்காக பதிவு செய்து காணாமல் போன சுப்பிரமணியை தேடி வருகின்றனர்