மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிற்க, ஒரு நாள் ஒரு சாலை திட்டம். ஒரே பக்கம் வரிசையில் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுருத்தல்
மதுரையில் பெருகி வரும் வாகனங்களாலும், சாலைகளில் ஒழுங்கு முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களாலும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் ஒரு நாள் ஒரு சாலை திட்டத்தின் மூலம் நகரில் உள்ள முக்கிய சாலைகளை சீர் செய்யலாம் என்று போலீஸ் கமிஷனர் திரு.J.லோகநாதன் அவர்கள் ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார் அதன்படி
மதுரை நேதாஜி ரோடு மற்றும் தமிழ் சங்கம் ரோடு பகுதிகளில் ஒரு நாள் ஒரு சாலை திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது இதில் நேதாஜி ரோட்டில் போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின் அவர்களின் தலைமையில் சாலைகளில் போக்குவரத்தை போக்குவரத்து போலீசார் சீர் செய்தனர் அதன்படி ஒரே பக்கம் ஒரே வரிசையில் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவது பிளாட் பாரங்களில் உள்ள கடைகளை அகற்றி அதில் பொதுமக்களை நடந்து செல்ல வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்
மேலும் அங்குள்ள கடைக்காரர்களிடம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ஒழுங்காக நிறுத்தும்படி அறிவுறுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர் மேலும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதனால் நேதாஜி ரோட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் இல்லை வாகன ஓட்டிகள் எளிதாக சாலைகளை கடந்து சென்றனர் இதே போன்று தமிழ் சங்க ரோட்டில் போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது