Police Department News

மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம்

மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம்

மதுரை காவல் நிலையங்களில் பலர் ‘மாற்றுப் பணியாக’ வேறு பிரிவுகளில் பணியாற்றுவதால் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமையையும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது

தேர்தலையொட்டி மதுரையில் போலீசார் பலர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர், இதில் சிலர் தங்கள் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களை கூறி மாற்றுப் பணியாக மதுரைக்குள்ளேயே சிறப்பு பிரிவுகளில் கேட்டு பெற்று பணியாற்றி வருகின்றனர், இன்னும் சிலர் தங்களிடம் மாற்றப்பட்ட ஸ்டேஷன்களில் ரிப்போர்ட் செய்து விட்டு மாற்று பணியாக விரும்பிய இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அதேசமயம் இவர்களுக்கு பதில் மாற்று ஆள் காவல் நிலையங்களில் நியமிக்காததால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

தேர்தல், உள்ளூர் திருவிழா பாதுகாப்பு பணி காரணமாக காவல் நிலையங்களில் அன்றாட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருக்கும் போலீசாரை கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியது உள்ளதால் ஓய்வின்றியும் மன அழுத்தத்திற்கும் பனிச்சுமைக்கும் ஆளாகியுள்ளனர்

போலீசார் கூறியதாவது தேர்தல் நேரத்தில் மாற்றுப் பணியாக சிலர் சென்று விட்டதால் எங்களால் சமாளிக்க முடியவில்லை அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்காததால் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியவில்லை

பிற காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் தங்கள் செல்வாக்கால் அங்கு பணிபுரியாமல் இருப்பது என்ன நியாயம் இது கமிஷனர், எஸ்.பி., க்கு தெரிந்து நடக்கிறதா என தெரியவில்லை இது தொடர்ந்தால் தேர்தல் முடிவு வருவதற்குள்
உடல் நலம் பாதித்து அவர்கள் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.