Police Recruitment

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்,ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்,ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி, சைபர்கிரைம் பிரிவு திரு. D. அசோக் குமார் காவல் கண்காணிப்பாளர், அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.C.கார்த்திகேயன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் இன்று‌ (05.04.2024) மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள், காவலர் திரு. ராம்நயினார் ஆகியோர் வடக்கன்குளம், ஜாய் பல்கலைக்கழகத்தில் இணைய வழியில் நடைபெறும் loan app, online job fraud, matrimony fraud, scholarship fraud etc.., குற்றங்கள் பற்றியும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் “1930” வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.