ஆடம்பர பங்களாவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
இதனை அடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை நடத்த.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் அவர்கள் தலைமையிலான தனிப்பட்டையினர் ஜெயந்திபுரம் தெற்கு சண்முகபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு விஜயராஜன் என்பவர் ஆடம்பர பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு புதிதாக குடி பெயர்ந்து செல்வதற்கான பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்ற போது. அங்கு பூஜை அறை போல ஜோடி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துள்ளது.
இந்த நிலையில் பூஜை அறை போலியாக உருவாக்கப்பட்டிருப்பது போல இருந்த நிலையில் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சாமி அறையைத் திறந்து பார்த்தபோது அதற்குள் 32 கிலோ கஞ்சா பட்டணங்கள் வலுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சா பதுக்கி வைத்திருந்த விஜயராஜனுக்கு உதவியாக இருந்த பாரதியார் கடைசி தெரு பகுதி சேர்ந்த பிரபு 39/24
என்பவரை கைது செய்த நிலையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளியான விஜயராஜன் தப்பிச் சென்ற நிலையில் தனிப்பட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.