மதுரை மாவட்டம்
வீடு கட்ட முதல் தவணை பணத்தை வழங்கிய பவுண்டேஷன்
மதுரை மாவட்டம் வடுகப்பட்டியில் தத்தெடுத்த கிராமத்தில் வீடு கட்ட முதல் தவணையாக பணத்தை வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வடுகபட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக,
அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவச வீடு கட்டித் தரும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு ஏழு லட்சம் விகிதம் முதல் தவணையாக ஒன்ற லட்சம் காசோலை ஜோய்ஆலுக்காஸ் ஷோரூம் மேலாளர் அஜோஜோனி வழங்கினார்.
முன்னதாக சமயநல்லூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு வரவேற்றார்.
தங்கள் கிராமத்துக்கு வருகை தந்த ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் நிர்வாகிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் கிராம மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
முடிவில் கிராம செயலாளர் பங்கஜவல்லி நன்றி கூறினார்