Police Department News

தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் பணியிடம் மாற்றம்.

தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் பணியிடம் மாற்றம்.

தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டைக்கு புதிய காவல் காணிப்பாளராக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். டிஎஸ்பி காயத்ரி ஏன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.. அதன் பின்னணி என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த 35 வயதாகும் காளிகுமார் டிரைவர் ஆவார். இவர் அண்மையில் திருச்சுழியை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே காளிகுமார் சென்றபோது இரு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காளிகுமாரை திடீரென வழிமறித்து கொடூரமாக ஆயுதங்களால் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த காளிகுமார் சுருண்டு விழுந்தார்.. இதைப்பார்த்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வழியிலேயே காளிகுமார் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையையும் மேற்கொண்டனர்.

இனிடையே காளிகுமாரின் உறவினர்கள் மற்றும் சக டிரைவர்கள் ஆத்திரமடைந்து, மருத்துவமனையில் குவிந்து, கொலையாளியை கைது செய்ய கோரி முழக்கமிட்டனர்.. அத்துடன், திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், தகராறிலும் ஈடுபட்டுள்ளார். எனவே, அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்த டிஎஸ்பி காயத்ரி முயன்றார். அப்போது திடீரென அந்த இளைஞர், பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்க துவங்கி விட்டார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், அந்த இளைஞரை சுற்றிவளைத்து விட்டனர். ஆனால், அதற்குள் போராட்டக்காரர்கள் பெண் டிஎஸ்பி காயத்ரி, மற்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு சிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை இழுத்து பிடித்து தாக்கினார்கள். இதனால் அந்த இடமே பதற்றமாக மாறியது. இது தொடர்பாக வீடியோக்கள் வெளியான நிலையில், டிஎஸ்பிஐ தாக்கியதாக கூறப்படும் ராமநாதபுரம் அருகேயுள்ள நெல்லிகுளம் பாலமுருகன் (43) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, பொன்குமார், காளிமுத்து, சஞ்சய்குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை புதிய துணை டிஎஸ்பி மதிவாணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

டிஎஸ்பி காயத்ரி திடீரென மாற்றப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டிஎஸ்பி காயத்ரி கடந்த ஆகஸ்ட் 27-ந்தேதியே இடம் மாற்றப்பட்டார். அதாவது கட்சி பேரணியின் போது சரியான அணுகுமுறை இல்லை என அவர் மீது சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதற்கிடையே, அருப்புக்கோட்டையில் உள்ள காவல் நிலையங்களில் பெண் அதிகாரிகள் அதிகம் உள்ளனர். எனவே இந்த காரணங்களால் காயத்ரி மாற்றப்பட்டு இருந்த நிலையில், அதற்கு பின்னர் தான் அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. எனவே அந்த சம்பவத்துக்கும், காயத்ரி இடமாற்றத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.