Police Department News

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல்

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல்

மதுரை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்றவும் விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஊர்வலங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடத்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி S. வனிதா அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது

ஆட்டோ டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகள் மட்டுமே பயணிகளை ஏற்று செல்ல வேண்டும் கூடுதலான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது போக்குவரத்து விதிமுறைகளை ஆட்டோ டிரைவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்

ஆட்டோ களுக்கான ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும் சாலைகளில் செல்லும்போது சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் வாகன நிறுத்தங்களில் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது, அதிக வேகத்தில் செல்வது இதர ஆட்டோகளுடன் போட்டியிட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது
இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது இந்த கூட்டத்தில் போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின்ராஜ் இளமாறன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ.தங்கமணி, கனேஷ்ராம், ஷோபனா, பஞ்சவர்ணம், கார்த்திக், சுரேஷ்குமார், ரமேஸ்குமார், தங்கப்பாண்டியன், பூரணகிருஷ்ணன், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.