போக்குவரத்து விதி மீறல்களுக்கு எந்த போலீஸ் அபராதம் விதிக்கலாம்
போக்குவரத்து விதிமீறல்களை எந்த போலீஸ் சோதனை செய்யலாம் யார் அபராதம் விதிக்கலாம் என்பது பொது மக்களில் நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது. காவல்துறையை பொறுத்தமட்டில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து ஆயுதப்படை என செயல்பட்டு வருகிறது இதில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு என்ற லோக்கல் போலீசாருக்கு சகல அதிகாரங்களும் உண்டு இவர்கள் வாகனங்களை எந்த இடத்திலும் சோதனை செய்தல் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்க முடியும் அடுத்து மாநகரை பொறுத்த மட்டில் போக்குவரத்து காவலர்கள் அவர்கலோடு ஆயுதப்படை போலீசாரும் இணைந்து போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கலாம் அவ்வாறு அபராதம் விதிக்க ஒரு S.S.I, ஒரு S.I.அல்லது ஆய்வாளர் மட்டுமே உங்களுக்கு அபராதம் விதிக்க முடியும் மற்றும் போக்குவரத்து காவலர்களை பொருத்த மட்டில் தலைமை காவலர் நிலையில் உள்ள காவலர்கள் ஆவணங்களை சோதனைக்கு காண்பிக்க சொல்லி கேட்கலாம் மற்றபடி ஒரு சாதாரண காவலரோ அல்லது தலைமை காவலரோ எந்த விதமான அபராதமோ விதிக்க முடியாது. அடுத்ததாக மோட்டார் வாகன ஆய்வாளர் டெக்னிக்கல் நான் டெக்னிகல் அவர்களும் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கலாம்.