மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரின் 90 வது மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகனாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மது விலக்கு பிரிவு போலிசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தி வருகின்றனர் இதுவரை 89 பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்து வந்த நிலையில் கடந்த 5 ம் தேதி 90 வது நிகழ்சியாக மதுரை நரிமேடு மருதுபாண்டிய நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு டெக்னிக்கல் டிரைனிங் அண்டு பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர் நிகழ்சி நடத்தினர் இந்த நிகழ்சியில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர்கள் கலந்து கொண்டு காவல்துறை சார்பாக சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் மற்றும் முதல்நிலை காவலர் திரு. வெங்கடேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர் இதில் போதை மாத்திரைகள் எவை வலி மாத்திரைகள் மற்றும் மனநலம் சம்பத்தப்பட்ட மாத்திரைகளை எப்படி போதைக்கு பயன்படுத்துகின்றனர் அதை எவ்வாறு தடுப்பது மற்றும் மெடிக்கல் ஷாப்பில் டாக்டரின் சீட்டிற்கு மருந்து மருந்து கொடுக்கும் நடைமுறைகளைப் பற்றி விழிப்பூணர்வு ஏற்படுத்தினர்