Police Department News

ரூ.2 கோடி ஆன்லைன் மோசடி| உடனடி புகாரின் பேரில் பணத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் – நடந்தது என்ன?

ரூ.2 கோடி ஆன்லைன் மோசடி| உடனடி புகாரின் பேரில் பணத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் – நடந்தது என்ன?

இரண்டு கோடி ரூபாய் ஆன்லைனில் மோசடி.. உடனடி புகாரின் பேரில் ரூபாய் 2 கோடியை முடக்கம் செய்த சைபர் கிரைம் போலீசார்.
உள்துறை அமைச்சகம் மற்றும் Regions Bank USA ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர முயற்சியின் அடிப்படையில் மோசடி செய்யபட்ட முழுத் தொகையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அழைப்புகளை தடுக்க மத்திய தொலைத் தொடர்புத் துறை புதிய முயற்சி!

சென்னையில் உள்ள Agrigo Trading Private Limited, கம்பெனியின் மேலாளருக்கு அவர் வணிகம் செய்து வரும் தெரிந்த நபரின் மின்னஞ்சல் போல உள்ள kunaltre@mail.com என்ற போலியான மின்னஞ்சல் முகவரியிலிருந்து நம்ப தகுந்த வகையில் அந்த கம்பெனி கோரிய பொருள்களுக்கான அடக்கவிலை பட்டியலுடன் செலுத்தவேண்டிய பணம் -USD 238,500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ 2,00,10,150), மற்றும் அமெரிக்காவில் உள்ள Regions Bank கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் போலியான மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர்.

அந்த மின்னஞ்சல் முன்னதாக பெறப்பட்ட மின்னஞ்சல்களுடன் தொடர்புடையதாக இருந்ததால் மேற்படி வணிக மேலாளர் 2 State Bank of India, Leather International Branch, Chennai மூலம் 26.09.2024 ம் தேதி பணத்தை அனுப்பியுள்ளார். 27.09.2024ம் தேதியன்று பணம் கிடைத்துவிட்டதா? என பொருள் அனுப்பும் நிறுவனதுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த மின்னஞ்சல் மோசடி பற்றி தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மோசடி செய்யபட்ட தொகையைக் கண்டறிய சென்னையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லெதர் இன்டர்நேஷனல் கிளைக்கு கடிதம் அனுப்பி அந்த பணம் அமெரிக்காவில் உள்ள Regions Bank கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை பாரத ஸ்டேட் வங்கி மூலம் உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையக சைபர் கிரைம் தனிப்படை குழு, உள்துறை அமைச்சகம் மற்றும் Regions Bank USA ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர முயற்சியின் அடிப்படையில் மோசடி செய்யபட்ட முழுத் தொகையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த பணமானது விரைவில் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற எண்ணில் உடனடி புகார் தெரிவிக்க மாநில சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.