செங்கோட்டை பெட்ரோல் பங்க் ல் திருட்டு குற்றவாளி உடனடி கைது.
செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மகாதேவ் அய்யர் பெட்ரோல் பல்க் செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே இயங்கி வருகிறது. மேற்படி பல்க் -ல் அலுவலகத்தில் வைத்திருந்த பணம் ஒரு லட்சம் பணம் திருடு போனதாக 09- 10- 2024 ம் தேதி பல்க் உரிமையாளர் ஹரி வெங்கடேஷன் என்பவர் புகார் மனு கொடுத்ததின் பேரில் உடனடியாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு K.S பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி முருகேஸ்வரி மற்றும் தலைமை காவலர் ராஜா சிங் முதல் நிலை காவலர் கணேஷ் குமார் சம்பவ இடம் சென்று அங்கு சுற்றுப்புறத்தில் உள்ள CCTV கேமிராவை பார்த்து சந்தேக நபர் பற்றி பல இடங்களில் விசாரித்தும் சந்தேக நபரின் போட்டோவை பல நபரிடம் காண்பித்து விசாரித்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, காசிமேஜர்புரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்து திருடிய பணம் ஒரு லட்சத்தையும் மீட்டு குற்றவாளி முத்துக்குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டார்.