பல் மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய காவல்துறையினர்
இன்று 09/10/2024ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக மதுரை CSI பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நம்மை இதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் திரு.இளமாறன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் Dr.திரு.தன்வீர் முகமது நிஜாய் மற்றும் பேராசிரியர் Dr.வெண்ணிபிரிட் கிறிஸ்டி அவர்கள் முன்னிலை வகித்தனர்.
மதுவிலக்குக் அமலாக்கப் பிரிவு காவல்துறை சார்பு ஆய்வாளர்
திரு.ராஜ்குமார் மற்றும்
மாநகர ஆயுதப்படை முதல்நிலை காவலர் திரு.வெங்கடேஷ் பாபு மற்றும் மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.