தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றம் நடவாமல் இருக்க மற்றும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஊரெங்கும் CCTV கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற உத்தரவின் படி இன்று செங்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 65 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவலர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய இருசக்கர வாகனங்களில் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற அறிவுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டு அவர்களுக்கு தலைக்கவசமும் வழங்கப்பட்டது. பின்பு செங்கோட்டை பேருந்து நிலையத்தில் வைத்து போதை இல்லா செங்கோட்டைக்கு காவல் துறையும் நானும் பொறுப்பு என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து Selfie Point எடுத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் புளியரை காவல் சோதனைச் சாவடியில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டும் மேலும் அவர்களின் உத்தரவுப்படி சட்ட விரோதமான மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் தென்காசி மாவட்டத்திற்குள் வராமல் தடுப்பதற்காக காவல் ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து தீவிரமாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனை மேற்கொண்டு கண்காணித்து வரப்படுகிறது. புளியரை காவல் நிலைய அதிகாரி மற்றும் ஆளிநர்களின் பாதுகாப்பின் நலன் கருதி தலைக்கவசம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.