கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
மதுரை தெற்கு வாசல் காவல் நிலைய சிறப்பு எஸ் ஐ கள் வெற்றிவேல் கல்யாணசுந்தரம் காவலர்கள் சங்கர் குரு, புவனேஸ்வரன், உள்ளிட்ட போலீசார் மீனாட்சி தியேட்டர் பள்ளம் மற்றும் அமிர்தம் தியேட்டர் பகுதியில் தீபாவளி அன்று ரோந்து சென்றனர் அப்போது நான்கு நபர்கள் கத்தி அருவாள்களை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவர்களை பிடித்தனர், விசாரணையில் காஜா தெருவை சேர்ந்த ஹரிஹரன் வயது 20 ராமமூர்த்தி வயது 40 ஜெய் சிவா வயது 24 சாய்ராம் வயது 24 என தெரிய வந்தது இவர்கள் தீபாவளி பொருட்கள் வாங்க செல்வோர் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செல்வோரிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது இதை தொடர்ந்து இந்த நான்கு பேரையும் தெற்கு வாசல் போலீசார் கைது செய்தனர்